இந்தியா பிரதான செய்திகள்

உச்ச நீதிமன்றின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்


இந்திய உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.

அதன்படி தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா எதிர் வரும் ஒக்டோபர் 2-ம் திகதி ஓய்வுபெற உள்ள நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள சிரேஸ்;ட நீதிபதியான ரஞ்சன் கோகாய்யின் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில், ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒக்டோபர் 3ஆம் திகதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொள்ள உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் திகதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பணியாற்ற உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers