இலங்கை பிரதான செய்திகள் முஸ்லீம்கள்

மனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ் முஸ்லீம் மக்களுக்கு யார் கைகொடுப்பார்கள்?


யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றியே வாழ்ந்து வருகின்றார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆண்டிற்கு பின்னர் ஒப்பீட்டளவில் சிறியதாக மீள்குடியேற்றம் என்ற பெயரில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் பூரணமாக மேற்கொள்ளப்பவில்லை.

அரச அரச சார்பற்ற அமைப்புகள் இக்காலத்தில் பல திட்டங்களை முன்மொழிந்துள்ள நிலையில் அரசியல் வாதிகள் சிலரின் வரட்டுகௌரவங்களினால் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும், அதனால் மக்களே பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வகையில் இன்று வரை மனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களுக்கு இனி யார் கைகொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 

படங்கள் – தகவல் – பாறுக் ஷிஹான்..

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.