இலங்கை பிரதான செய்திகள்

அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார் சுமந்திரன்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

குறுகியகால புனர்வாழ்வு வழங்கி தம்மை விடுதலை செய்யுமாறுகோரி அனுராதபுரம் சிறைச்சாலையில் 3 வது நாளாக உண வு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையா டியுள்ளார்.

இன்றுடன் 3 வது நாளாக ம.சுலக்‌ஷன், இ. திருவருள், சூ.ஜெயச்சந்திரன், இரா.தபோரூபன், சி.தில்லைராஜ், இ.ஜெகன், சி.சிவசீலன், த.நிர்மலன் ஆகிய 8 தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

இவர்களுடைய பிரதான கோரிக்கை தங்களை குறுகியகால புனர்வாழ்வு வழங்கி தங்களை விடுதலை செய்யவேண்டும் என்பதாகும். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப் பினர் சுமந்திரன் மற்றும் மாகாணசபை உ றுப்பினர் கே.சயந்தன் ஆகியோர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்கு உணவு தவிர்ப்பு போரா ட்டத்தினை நடாத்திவரும் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers