இலங்கை பிரதான செய்திகள்

“சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”

“தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது எதிர்க் கட்சி தலைவர் பதவியை ஒரு நாள் எனக்கு தந்தால்  அப்பதவியின் பெறுமதியை உணர்த்துவேன்.அப்பதவி மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதனை காட்டுவேன்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று (20-09-2018) கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தான் 2004ம் ஆண்டு முதல் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையிலேயே வலியுறுத்தி வந்துகொண்டிருப்பதாகவும், ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக்கொண்டுள்ள சம்பந்தன் தலைமையிலானவர்கள் இவர்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது. எனினும் அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துவரும் கூட்டமைப்பினர், கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்த தவறியுள்ளனர். அரசாங்கத்தை தாம்தான் காப்பாற்றுவதாகவும், தம்மால்தான் அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும் அடிக்கடி கூறிக்கொள்ளும் சம்பந்தன், பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் அரசியல் கைதிகள் விடயத்தில் பேசப்போவதாக இப்போதுதான் சொல்கின்றார் எனின், இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாளுக்கு நாள் பொருட்கள் சேவைகளின் விலைகள் அதிகரிக்கரித்துச் செல்கிறது ,ஆனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சி வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கிறது. சம்பந்தன் அவர்களுக்கு இவ்வாறு அமைதியாக இருக்கவே இந்தப் பதவி வழங்க்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட ஆனந்தசங்கரி இன்று சமஸ்டி தொடர்பில் பேசுகின்றார்கள். ரணில் விக்ரமசிங்க அன்று தனது தேர்தலில் சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்டார். அக் காலத்தில் பல்வேறு தரப்பினரிடமும் பணத்தை பெற்றுக்கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்தனர்.அவ்வாறு இருந்தபோதும் 49 வீதமான மக்கள் சமஸ்டிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

அத்தோடு இறுதி யுத்தத்தை தலைமைதாங்கி நடத்திய படைத்தளபதியான சரத்பொன்சேகா 2009 மே மாதம் பிரபாகரனை கொன்றுவிட்டதாக அறிவித்தார். அதே சரத்பொன்சேகாவுக்கு 2010 ஜனவரியில் வாக்களிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டனர் எனவும் தெரிவித்தார்

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • “தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது எதிர்க் கட்சி தலைவர் பதவியை ஒரு நாள் எனக்கு தந்தால் அப்பதவியின் பெறுமதியை உணர்த்துவேன். அப்பதவி மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதனை காட்டுவேன்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

    ஒருநாளில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதனை பதவி ஏற்க முதல் பட்டியலிட்டு எல்லோரும் அறியச் செய்வாரா ஆனந்தசங்கரி?
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers