சினிமா பிரதான செய்திகள்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர் தி அயர்ன் லேடி


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பினை இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார். இப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ (The Iron Lady ) என்று தலைப்பு வைத்துள்ளனர்.  இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற விவரம் வெளிவராத நிலையில் விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என குறித்த படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, இயக்குனர்கள் பாரதிராஜா, மற்றும் விஜய் ஆகியோரும் தனித்தனியாக இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers