Home இலங்கை மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கருத்தினை விமர்சித்த மங்கள

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கருத்தினை விமர்சித்த மங்கள

by admin


மனித உரிமைகள் சம்பந்தமாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ள கருத்தை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர விமர்சித்துள்ளார்.  பிரபல்யம் அடைவதற்காக கருத்து தெரிவிக்கும் சந்தரப்பங்களில் தவறிழைத்து விடுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

அண்மையில் மத நிகழ்வொன்றில் உரையாற்றிய மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பல தசாப்தங்களாக மத போக்கு கொண்ட இலங்கை போன்ற நாடுகளுக்கு மனித உரிமைகள் சம்பந்தமாக பாடம் எடுப்பதற்கு மேற்கத்தையவாதிகள் முயற்சிப்பதாகவும் தற்காலத்தில் மேற்கத்தைய சமூகத்தின் புதிய மதமாக மனித உரிமைகள் பாடம் மாறியுள்ளதாவும் தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே மங்கள் மேற்கண்டவாறு விமர்சித்துள்ளார்.

இதேவேளை மனித உரிமைகளை எதிர்க்கும் விதமாக வெளியாகியுள்ள செய்தி உண்மையாக இருந்தால் அது வெட்கப்பட வேண்டிய விடயம் என்று காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar September 25, 2018 - 8:02 pm

If any one in adehere towards those code of conduct by respecting the human rights. Why those other elements will poke in towards our business. May God bless mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More