இந்தியா சினிமா பிரதான செய்திகள்

கார் விபத்தில் படுகாயம் அடைந்த பிரபல வயலின் கலைஞர் பாலா பாஸ்கர் உயிரிழந்துள்ளார்.

கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பிரபல வயலின் கலைஞர் பாலா பாஸ்கர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த பிரபல வயலின் கலைஞர் பாலாபாஸ்கர். இவர் கடந்த வாரம் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வியினியுடன் சென்ற  போது அவர்கள் பயணித்த கார்   சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்திருந்தார்.

வயலின் கலைஞர் பாலா பாஸ்கரும், அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது கார் சாரதி ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை  பாலா பாஸ்கர்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விதி எழுதிய ஓர் இசை விபத்து….
Sep 26, 2018 @ 09:11


கேரளாவில் நடந்த கார் விபத்தில் பிரபல வயலின் இசைக் கலைஞரும், இசையமைப்பாளருமான பால பாஸ்கரின் 2 வயது மகள் பலியானார். பாஸ்கரும், மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வயலின் இசை கலைஞரான, கேரள மாநிலத்தை சேர்ந்த பாலபாஸ்கர் திரைப்படங்கள், குறும்படங்கள் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என பலவற்றிற்கு இசையமைத்துள்ளார். 17 வயதில் அவர் மாங்கல்ய பல்லாக்கு என்ற படத்திற்கு இசையமைத்தார். 12 வயதில் இருந்து அவர் மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்து வருகிறார்.

தனது மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வினியுடன் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றார். காரை ஓட்டுணர் அர்ஜுன் செலுத்தியுள்ளார். கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கார் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிபுரத்தில் சென்ற போது கார் விபத்துக்குள்ளானது. பால பாஸ்கர் குடும்பம் சென்ற கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் குழந்தை தேஜஸ்வினி இறந்து போனார்.

படுகாயம் அடைந்த பாலபாஸ்கர், லட்சுமி, அர்ஜுன் ஆகியோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பாலபாஸ்கர் மற்றும் லட்சுமி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கார் ஓட்டுனருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் ஓட்டுனர் அர்ஜுன் தூங்கியதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.  மேடை நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன பாலபாஸ்கரின் குடும்பம் விபத்தில் சிக்கியது குறித்து அறிந்து பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். குழந்தை பாலபாஸ்கருக்கும், லட்சுமிக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு தேஜஸ்வினி பிறந்தார். குழந்தை இல்லையே என்று ஏங்கிக் கிடந்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. தேஜஸ்வினி 2 வயதிலேயே இறந்துபோனார்…

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers