இலங்கை பிரதான செய்திகள்

நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறுவதன் மூலம் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யலாம்


கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிப்போர் இலங்கைப் பிரஜாவுரிமையினையும் பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய முடியும் என உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.

இன்று உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நடைபெற்ற இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள வெளிநாட்டுப்பிரஜைகளில் இரட்டைக்கு குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொண்டவர்கள் வெளிநாடுகளிலேயே வசிக்காமல், அனைத்துத் துறைகளிலும் நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் எனவும் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.