இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கேரள கஞ்சா மீட்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நான்கு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஏழு மணியளவில் சந்தேகத்திடமான வாகனம் ஒன்று செல்வதனை அவதானித்த கிராமத்தின் இளைஞர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்

இளைஞர்கள் பின்தொடர்வதனை அவதானித்த அவர்கள் குறுக்கு வீதிகள் ஊடாக வேகமாக பயணித்த நிலையில் வழி தவறி குளப் பாதை ஒன்றினுள் நுழைந்து, வாகனத்தில் இருந்து நான்கு பொதிகளை எறிந்து விட்டு தொடர்ந்து வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர் . அவர்கள் எறிந்த பொதிகளைப் பார்வையிட்ட பொழுது சுமார் ஒரு கிலோ அளவிலான நான்கு கேரள கஞ்சா பொதிகள் காணப்பட்டுள்ளன.

இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட காவல்துறை சட்டவிரோத மது ஒழிப்புப் பிரிவு விசேட குழுவினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் குறித்த கஞ்சா பொதிகளையும் வாகனத்தையும் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.