ஈரானில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 5ம் திகதி முதல் கனமழை பெய்து வருவதனால் மஜந்தரன், கிலான், கோலஸ்டான் மாகாணங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன் மின்விநியோகமும் தடைபட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் இந்த மழை, வெள்ளதில்; 7 பேர் உயிரிழந்தனர் எனவும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவதற்கு குழுக்களை ஈரான் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment