இலங்கை பிரதான செய்திகள்

இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்?

சொந்த நிலத்தில் வாழ வேண்டும் – குளோபல் தமிழ்ச் செய்தியாயளர்…

சொந்த நிலத்தில் நின்மதியாக வாழ வழியில்லாமல் இரவு நேரங்களில் பெண்கள் ஒன்றாகவும், ஆண்கள் ஒன்றாகவும் உறங்கி மழையிலும், வெயிலிலும் அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்? என காஞ்சிரமோட்டை மக்கள் கண்ணீா்மல்க கேள்வி எழுப்பியிருக்கின்றனா்.

வவுனியா வடக்கு பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராம மக்கள் 28 வருடங்களின் பின்னா் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறிவரும் நிலையில் வனவள திணைக்களம் மீள்குடியேற்றத்தை தடுத்து வருகின்றது.

இந்நிலையில் மக்களுடைய நிலமைகளை நோில் அவதானித்து அவற்றை உாிய தரப்பினாின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் 12 மாகாணசபை உறுப்பினா்கள் இன்று காஞ்சிரமோட்டை கிராமத்திற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனா்.

இதன்போதே மக்கள் மாகாணசபை உறுப்பினா்களிடம் கண்ணீா்மல்க மேற்படி கோாிக்கையினை முன்வைத்துள்ளனா். இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில். 1983ம் ஆண்டு யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் காஞ்சிரமோட்டை கிராமத்தில் இருந்த 3 போ் கடத்தி செல்லப்பட்டனா்.

அவா்களின் நிலை இன்றளவும் தொியாது. இந்நிலையில் தொடா்ந்தும் கிராமத்தில் இருக்க இயலாமல் 1983ம் ஆண்டு தொ டக்கம் 1990ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாம் எமது கிராமத்தை விட்டு வெளியேறினோம். பின்னா் இந்தியாவிலும், வடமாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் இடம்பெயா்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் எமது சொந்த நிலத்தில் நாங்கள் மீள்குடியேறிய நிலையில் வனவள திணைக்களம் எமது மீள்குடியேற்றத்திற்கு தொடா்ச்சியாக தடைகளை விதித்து வருகின்றது.

குறிப்பாக மீள்குடியேற்றத்திற்கு வந்திருக்கும் 38 குடும்பங்களுக்கும் அரை நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான நிதி கிடைத்துள்ளபோதும் வனவள திணைக்களம் அந்த நிதி எமக்கு கிடைக்காத வண்ணம் தடைகளை விதித்து வருகின்றது. இடப்பெயா்வுக்கு முன்னா் சுமாா் 300 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கே வாழ்ந்து வந்தோம். பலா் இப்போதும் தங்கள் சொந்த நிலத்திற்கு வருவதற்கு ஆசையாக உள்ளாா்கள்.

ஆனாலும் அச்சம் காரணமாக அவா்கள் வர தயங்குகிறாா்கள். நாம் எமது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வீடுகளை கட்டி நின்மதியாக வாழவேண்டும். அதற்கு ஆவண செய்யவேண்டும். மீள்குடியேற்றத்திற்கு வந்து 4 மாதங்களாகும் நிலையில் வீதி சீரமைத்து தரப்படவில்லை. மின்சாரம் தரப்படவில்லை. கிணறு அமைக்க அனுமதி தரப்படவில்லை. இவ்வாறான நிலையில் எங்களுடைய பிள்ளைகள் சுமாா் 5 கிலோ மீற்றா் துாரம் நடந்து பாடசாலைகளுக்கு சென்று வருகின்றாா்கள். 3 கிலோ மீற்றா் துாரம் நடந்து வைத்தியசாலைக்கு சென்று வருகின்றோம்.

நாம் எங்களுடைய சொந்த நிலத்தில் வாழவேண்டும். அதற்கு ஆவண செய்யுங்கள் என மக்கள் கண்ணீா்மல்க மேலும் கேட்டுள்ளனா்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.