Home இலங்கை காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)

காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

காஞ்சுரமோட்டை கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வனவள திணைக்களம் மற்றும் அரசாங்கம் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். எனக்கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதுடன், காஞ்சுரமோட்டை கிராமத்தில் 1990ற்கு முன்னா் அமைந்திருந்த பாடசாலையை மீள இயக்கவும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். என வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். .

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட காஞ்சுரமோட்டை கிராமத்தில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வனவள திணைக்களம் பெரும் சவாலாக இருப்பது குறித்து ஆராய்வதற்காக அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் 12 மாகாணசபை உறுப்பினா்கள் இன்று காஞ்சுரமோட்டை கிராமத்திற்க நேரடியாக சென்று பார்வையிட்டனர் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காஞ்சுரமோட்டை, நாவலர் பண்ணை பகுதிகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு சென்றது…

Oct 17, 2018 

வவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு அந்தக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டது.
அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் மாகாணசபை உறுப்பினர்கள் 12 பேர் கொண்ட குழு குறித்த கிராமங்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமைநேரில் சென்றன.

வடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவது அமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜீ.ரீ.லிங்கநாதன் வவுனியாவில் வனலாகாவினரின் அடாவடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் சபை விசேட கவனமெடுத்து கள விஐயமொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்திற்குச் செல்வதற்கும் அங்கு மக்கள் மீள் குடியமர்வதற்கும் வன இலாகாவினர் தடையேற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுருந்தது.

ஆகவே அந்தப் பகுதிக்கு வடக்குமாகாண சபை உறுப்பினர்கள் கள பயணம்மொன்றை மேற்கொண்டு உண்மை நிலையை உரிய நடவடிக்கையை முன்னெடுக்கும் வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மாகாண சபையின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு சென்று நிலைமைகளைக் பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து தொடர் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் கலந்தலோசித்தனர்.

இதேவேளை தமிழர் பிரதேசங்களில் உள்ள எல்லாம் காடுகளும் தமக்கும் தான் சொந்தம் என்ற அடிப்படையில் சகல காணிகளையும் வன இலாகாவினர் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

ஆகவே தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மாகாண சபைக்கு இருக்கிறது. என அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் சபையில் தெரிவித்திருந்தபோதிலும் , 38 வடமாகாண சபை உறுப்பினர்களில் 12 பேரே அக்கிராமங்களுக்கு சென்றிருந்தனர்.

 

 

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar October 17, 2018 - 8:57 pm

After Gandhian movements Dr.Rajasundaram good soul raise again over his dream land project over in those of his villages which he had been headed with architect David Aiya. In fact those good souls no more with us. Where Dr.Rajasundaram had been murdered along with other Kuttu mani and Jegan over Vellikady prison political prisoners mass murder by those Shinhales mobster inmates by state sponsored mass killing spree those days during the ethnic riots of Sri Lankan marred history. Now those good spirits over God’s spell comes back in those lands again by after mutual killings amongst valued Sri Lankan communities state soldiers, militants as well those innocent civilians in both communities sinhalese, tamil as well muslims in for pro long civil war era this settlement project comes again like a phoenix bird from those war torn ashes. In fact more over this would be the height time while over the visit would be envisaged for the UN head Antonio Guterres visit to Sri Lanka very soon may be such fact finding mission in more over that Indian Prof.Manivannan and his team members recent visit and their upcoming reports would reflect such bad scenario over Sri Lankan political as well economic environment in bad effect. Where as I had been a UN employee before worked over those war ravaged Sri Lanka knows that Prof who had been visited over UN sponsored during the height of war when I was first joins with UNHCR as a fresher and he made other visit while over end of Sri Lankan war. Now he has visited post Sri Lankan war period made such enormous bad remarks over Sri lankan plight over war victims of Widow single headed women family members spreaded over northern and eastern provinces of Sri Lanka. As well there has been a more suicide taken place due to economic background over those single women headed families lack of livelihood and unemployment problems prevails over in our land. In other now big issue over SLAS scandal that state authority just made irresponsible statement that question papers over those efficiency bar examination were leaked out not indicted anyone who held responsibility as well accountability over it made bit of shame for state administrative function bit sheer mockery at large would try to hiding the fact of those who ever the minority community members of state officials who ever passed in full scale of this exam. There these all issues should be rectified very soon if safeguard our mother land of Sri Lanka in so quick in near future if international stakeholders poke into their nose to smell over our defects. These are my humble views. May God bless our mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More