உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்றுக் காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சுமார் 10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதாகவும் இதனால் அச்சமடைந்த மக்கள் மக்கள் வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டோங்கே என்கிற கிராமத்தில் நிலநடுக்கத்தால் அதிகளவான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap