உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,431 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி அதிகமாக காணப்படுவதனால் 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது

அங்கு பனிப்புயல் கடுமையாக தாக்கி வருகின்ற நிலையில் கன்சாஸ், வோஷிங்டன், மிசோரி, செயின்ட் லூயிஸ், உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பனி 40 சென்ரிமீற்றருக்கும் மேல் காணப்படுவதாகவும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையங்களில் பனி அதிகளவில் கொட்டிக் கிடப்பதனால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை என்பதனால் 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.