இலங்கை பிரதான செய்திகள்

சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்

மகிந்த ராஜபக்சவும் அவரது தரப்பினரும் உண்மையில் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால், தமிழ் மக்கள் ஐக்கபிய இலங்கைக்குள் கோரும் தீர்வை ஏன் தடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உத்தேச அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை மகிந்த அணியினர் விரும்பவில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கண்டியின் இன்று இடம்பெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன் மக்களை நல்வழிப்படுத்தும் வகையில்  ஆலோசனைகளை வழங்கவேண்டிய மகாநாயக்க தேரர்களே,  புதிய அரசியலமைப்பை இனவாத நோக்கில் பார்ப்பது கவலையளிப்பதாகவும் இதனால், நடுநிலை பார்வையை செலுத்தும் மகாநாயக்க தேரர்களின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கு எதுவுமே கிடைக்ககூடாது என நினைக்கும் சிங்கள மேலாதிக்க தன்மை ஒழியும் வரை நாட்டில் நிலையான சமாதானம் மலரப்போவதில்லை. என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் உள்ளக பொறிமுறையானது என்றுமே வெற்றியளிக்காது என்றும்சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்பதையே மகிந்த அணியினதும், கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகளின் செயற்பாடுகள் உணர்த்துவதாகவும் அவர் கூறினார்.

ஐ.நா.வில் தமிழில் உரையாற்றியதாலும், பொங்கல் வாழ்த்துச் செய்தியை தமிழில் வெளியிடுவதாலும் தமிழ் மக்களின் மனங்களை வென்றுவிடலாம் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த வும், அவரது சகாக்களும் பகல்கனவு காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் சிற்றின்ப அரசியலைக்கண்டு, பேரின்பம் அடையுமளவுக்கு தமிழர்கள் ஒன்றும் கொண்டைக்கட்டிய சீனர்கள் அல்ல என்று தெரிவித்த வேலு குமா்ர, தமிழ் மக்கள்மீது உண்மையாகவே அக்கறை இருந்தால், அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் கோரும் அரசியல் தீர்வை வழங்க எதற்காக தடை ஏற்படுத்த வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • கடந்த காலத்தில் செய்த, தற்போது செய்யும், மற்றும் எதிர்காலத்தில் செய்யப்போகும் அதிகார ஏற்பாடுகளைப் பார்த்தால் தமிழ் பேசும் மக்களுக்கு எதுவுமே கிடைக்ககூடாது என அவர்கள் செயல்படுகிறார்கள். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்ட அதிகார ஏற்பாடுகள்:
  சுதந்திர தமிழ் ஈழம் (Country), கூட்டமைப்பு (Confederation), கூட்டாட்சி (Federalism), அதிகாரப் பகிர்வு (Power sharing), அதிகாரப் பரவலாக்கம் (Devolution) மற்றும் சட்டவாக்க அதிகாரப் பரவலாக்கம் (Legislative devolution).

  2. திட்டமிட்டுத் தாமதிக்கப்படும் தற்போதைய அதிகார சீரமைப்பு:
  இந்த சூழ்நிலையில் சம்பந்தரும் சுமந்திரனும் அரசுடன் சேர்ந்து நடந்து, ஒருமித்த நாடுக்குள், ஒற்றையாட்சிக்குள், வடமாகாணத்தில், அதிகாரப் பகிர்வை எடுக்க எடுத்த முயற்சிகளும் தாமதமாகிவிட்டது.

  3. அரசால் குறைக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட அதிகார மாற்றங்கள்:
  நிர்வாக அதிகாரப் பரவலாக்கம் (Administrative devolution)

  ஒருமித்த நாடுக்குள், ஒற்றையாட்சிக்குள் நிர்வாக அதிகாரம் பெரிய அளவில் இலங்கை முழுவதும் 1948 ஆம் ஆண்டுக்கு முன் தமிழர்களிடம் இருந்தது.

  2018 ஆம் ஆண்டில் ஒருமித்த நாடுக்குள், ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடம் இருப்பது மிக்க குறைந்த நிர்வாக அதிகாரம்.

  2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழர்களிடம் இருக்கக்கூடிய அதிகுறைந்த நிர்வாக அதிகாரத்தையும் முழுமையாக அகற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றது.

  4. இலங்கை அரசு அமைக்க முயற்சிக்கும் ஒரு நிரந்தரமான அதிகார ஏற்பாடு:
  தமிழர்களுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லாத ஒருமித்த நாடுக்குள் இருக்கும் ஒற்றையாட்சி (Unitary state).