Home பிரதான செய்திகள் எந்த இடத்திலும் களம் இறங்கி துடுப்பெடுத்தாட தயார் – டோனி :

எந்த இடத்திலும் களம் இறங்கி துடுப்பெடுத்தாட தயார் – டோனி :

by admin

எந்த இடத்தில் களம் இறக்க அணி விரும்பினாலும், மகிழ்ச்சியாக களம் இறங்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளதாக எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.  அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3-வதும் இறுதியுமான போட்டியில் இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்கள் பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலியுடன் இணைந்து 54 ஓட்டங்கள் சேர்த்த டோனி, கேதர் ஜாதவ் உடன் இணைந்து 121 ஓட்டங்களைப் பெற்றதுடன் மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்து p ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றிருந்தார்.

4 அல்லது 6 என எந்த இடத்தில் களம் இறங்கி துடுப்பெடுத்தாடினாலும் மகிழ்ச்சியே எனத் தெரிவித்த அவர் ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இடத்தை மாற்றிக் கொள்ளும்போது, அணியின் வலிமையை சமமாக வைத்துக் கொள்வது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
14 வருடத்திற்குப் பின்னர் தான் 4-வது இடத்தில் அல்லது 6-வது இடத்தில் களம் இறங்கி விளையாட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More