உலகம் பிரதான செய்திகள்

தாய்லாந்தில் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொலை


தாய்லாந்தில் அடையாளம் இனந்தெரியாதேரால் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் தென் பகுதியில் அமைந்துள்ள நாராதிவாட் மாகாணத்தில் உள்ள ரத்தனுபாப் புத்த மதம் ஆலயத்திலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி புத்த துறவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தில் புத்த மதம் பரவலாக காணப்பட்ட போதிலும் தென் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் இரு தரப்பினருக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.