Home உலகம் கொங்கோவின் எபோலாவால் உயிரிழப்புகள் 360ஐ கடந்தன…

கொங்கோவின் எபோலாவால் உயிரிழப்புகள் 360ஐ கடந்தன…

by admin

கொங்கோவின் மத்தியப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட எபோலா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தற்போது 360 இனைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 685 பேரில் 636 பேருக்கும் நோய் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டது எனவும் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட 245 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது

தொடர்ந்து எபோலா வைரசுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாகவும் கொங்கோ அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 15,145 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5,420 பேர் உயிரிழந்திருந்தனர்p என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More