உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

பிரபல கால்பந்து வீரர் சலா பயணித்த விமானத்துடன் காணாமல் போயுள்ளார்

A fan holds a portrait of Emiliano Sala in Nantes’ city center after news that newly-signed Cardiff City soccer player Emiliano Sala was missing after the light aircraft he was travelling in disappeared between France and England the previous evening, according to France’s civil aviation authority, France, January 22, 2019. REUTERS/Stephane Mahe

ஆர்ஜன்ரினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான எமிலியானோ சலா பயணித்த விமானம் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கழக அணி அண்மையில் வாங்கியருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கார்டிப் சென்ற அவர் ஒரு தனியார் விமானத்தில் பிரான்சுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சானல் தீவுகளுக்கு அருகே விமானத்துடன் சேர்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலா சென்ற விமானம் விபத்தில் சிக்கியதை பிரான்ஸ் விமான போக்குவரத்து ஆணையகம் உறுதி செய்துள்ளநிலையில் காணாமல் போன சலா மற்றும் விமானியை மீட்க தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும், இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விமானம் தண்ணீரில் இறங்கியிருந்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.