Home உலகம் அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத கடுமையான வெப்பக்காற்று :

அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத கடுமையான வெப்பக்காற்று :

by admin


அவுஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக இருப்பதால் மக்கள் பலவிதமான வெப்ப நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது எனவும் அடிலெய்ட் வடக்கு பகுதியில் நேற்று 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இது 1939-ம் ஆண்டில் பதிவான வெப்பத்தை விட அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அதேவேளை இதே நிலை தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள 13 நகரங்களில் நிலவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக உள்ளதனால் பலவிதமான வெப்ப நோய்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர் எனவும் இதுவரை 44 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்பக்காற்று தாக்குதலால் தெற்கு அவுஸ்திரேலியாவில் 90 குதிரைகள் இறந்துன்னதுடன் பல உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன எனவும் பருவ நிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More