இலங்கை பிரதான செய்திகள்

தைப்பொங்கல்தினம் வாள்வெட்டினை மேற்கொண்டமை தொடர்பில் மூவர் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது வாளால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டன எனவும் யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் கட்டுடையைச் சேர்ந்த ஒருவரும் ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த இருவரும் என மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தைப்பொங்கல் தினமான கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் இளைஞர்கள் இருவரை துரத்தி வந்து இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கைவிரல் துண்டாடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் சிறப்புக் காவல்துறைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap