குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னாரிலும் சுதந்திர தின நிகழ்வுகள் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
மன்னார் பிரதான பாலத்தில் காலை 8.15 மணியளவில் முப்படையினர்,பாடசாலை மாணவர்கள்,திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்ட அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வு பிரதான பாலத்தில் பாண்ட் இணை வாத்தியத்துடன் ஆரம்பமான அணிவகுப்பு மரியாதை மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.
பின்னர் சர்வமத பிரார்த்தனைகள் இடம் பெற்றதோடு,காலை 8.50 மணியளவில் தேசியக்கொடியினை மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராசினால் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசியகீதம் இசைக்கப்பட்டதோடு, சர்வ மத நிகழ்வுகளும் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் முப்படைகளின் உயர் அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள்,பிரதேசச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Add Comment