பிரதான செய்திகள் விளையாட்டு

ஆஷஸ் தொடர் வெற்றியில் ஸ்மித், வார்னர் ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கும் :


எதிர்வரும் ஆஷஸ் தொடரின் வெற்றியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோரின் ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என அவுஸ்திரேலிய அணியின் தற்காலிக தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடர் நேற்றையதினம் முடிவடைந்திருந்த நிலையில் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா தொடரை 2-0 என கைப்பற்றியிருந்தது.

கடந்த ஆஷஸ் தொடருக்குப்பின் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் இருந்த அவுஸ்திரேலியாவிற்கு இந்த வெற்றி நம்பிக்கையளித்துள்ள நிலையிலேயே டிம் பெய்ன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் மற்றும் ஸ்மித் மீதான ஓராண்டு தடை அடுத்த மாதத்துடன் முடிவடைவதனால் அவர்கள் இருவரும் உலகக்கிண்ணம் மற்றும் ஆஷஸ் தொடரின்போது விளையாடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது தங்களுக்குத் தெரியும் எனவும் தடை முடிந்த பின்னர் கடந்த காலத்தை போன்று மீண்டும் அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார்களெ டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers