சினிமா பிரதான செய்திகள்

புதிய படத்தில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்


அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிக்கும் விஜயின் 63ஆவது திரைப்படத்தின் அறிமுக பாடலில் விஜய்யுடன் 100 குழந்தைகள் நடனமாடுகின்றனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றது.

அண்மையில் பென்னி மில் என்ற இடத்தில் பாரிய அரங்குகள் அமைத்து சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலை படக்குழு படமாக்கியுள்ளது.

10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை விஜய்யின் அறிமுக பாடலில் ஆட வைப்பதற்கு இயக்குனர் அட்லி தீர்மானித்துள்ளார். பாடல் காட்சிகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்ட பின்னர், குழந்தைகளுடன்  சிறிய நேரத்தை செலவிட்ட விஜய், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.

ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜயின் நாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, . ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers