உலகம் பிரதான செய்திகள்

15 ஆண்டுகளாக செவ்வாயில் ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்துள்ளது

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் முற்றிலும் செயலிழந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த 2003ம் ஆண்டு ஒபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 ராக்கெட் மூலம் அனுப்பியிருந்தது.

இதையடுத்து லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து, ஒபர்ச்சுனிட்டி ரோவர் பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் 7 மாதங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் வீசிய புயலில் சிக்கிய இந்த ரோவர் விண்கலம் புயலுக்கு பிறகு காணாமல் போயிருந்தது.

புpன்னர் புயலின் வேகம் குறைந்து பின்னர் ரோவர் விண்கலம் தென்பட்டதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் ரோவர் விண்கலம் முழுமையாக செயலிழந்து விட்டதாகவும், அதனுடைய சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரோவரின் ஒரு பாகம் மட்டும் இடையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ரோவரில் படிந்த தூசு காரணமாக அது தொடர்ந்து செயல்பட முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக நேற்று தொடர்பு கொள்ள முயன்றும் பயனளிக்காததால் ஒபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்து விட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்தில் 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த ஒபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.