பிரதான செய்திகள் விளையாட்டு

ஜோ றூட் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 135 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்து எட்டாமிடத்திலிருந்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட் மூன்று இடங்கள் முன்னேறி, ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணித்தலைவர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில் கேன் வில்லியம்சன் இரண்டாம்  இடத்திலும் செற்றேஸ்வர் புஜாரா முன்றாவது இடத்திலும் ஸ்டீவ் ஸ்மித் நான்காவது இடத்திலும் ஹென்றி நிக்கொல்ஸ் மற்றும் ஜோ றூட் ஆகியோர் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் றபாடா முதலிடத்திலும் கமின்ஸ் இரண்டாம் இடத்திலும் ஜேம்ஸ் அன்டர்சன் மூன்றாம் இடத்திலும் . வேர்ணன் பிலாந்தர் நான்காம் இடத்திலும் ஜடேஜா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 127 ஓட்டங்களைப் பெற்றதுடன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அணிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும் தென்னாபிரிக்கா இரண்டாம் இடத்திலும் நியூசிலாந்து 3ம் இடத்திலும் அவுஸ்திரேலியா 4ம் இடத்திலும் இங்கிலாந்து 5ம் இடத்திலும் இலங்கை 6ம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.