Home இலங்கை வடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

வடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

by admin

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்   தரன்ஜித் சிங் சந்து மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.

 வட மாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் செயற்திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் தற்போது போலவே எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார்.

வட மாகாணத்தில் செயற்திட்டங்களையும் உதவித்திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திவரும் இந்திய அரசாங்கத்திற்கு ஆளுநர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சார்பிலும் அரசின் சார்பிலும் வட மாகாண மக்கள் சார்பிலும் தனது நன்றியினை தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More