இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண காணிப்பிரச்சினை- ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை

வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக காணிகளை அளவிடுதல் காணப்படுவதால் காணிகளை அளவிட நில அளவையாளர் திணைக்களத்தில் போதிய ஆளணியினர் இல்லாமையின் காரணமாகவே ஓய்வுபெவுற்ற நில அளவையாளர்களின் சேவையினை பெற்றுக்கொள்ளும் முகமாகவே ஆளுநரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை வட மாகாண காணி நிர்வாக திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் தமது விபரத்தினை தபால் மூலமாகவோ அல்லது இணையத்தின் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

அலுவலக முகவரி – காணி நிர்வாக திணைக்களம், வட மாகாணம், 59, கோவில் வீதி,யாழ்ப்பாணம்.

தொலைபேசி இல – 0212220836

இணையத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள- https://goo.gl/bj7duZ

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.