ஓமானில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் வேறொரு குடும்பத்தினைச் சேர்ந்த பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆத்துடன் விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணித்த கணவரும் அவர்களின் மற்றொரு ஆண் குழந்தையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அக்கரைப்பற்றைச் சேர்ந்த 49 வயதான எச்.சக்கி என்பவர் தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
Add Comment