பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், முல்தான், பைசாலாபாத், சியோல்கோட் ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டு வருவதனையடுத்து இந்திய விமானப் படை போர் விமானங்கள் அவர்களது முகாம் மீது குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டதில் சுமார் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், முல்தான், பைசாலாபாத், சியோல்கோட் ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
Spread the love
Add Comment