அசுரன் திரைப்படத்தின் பின்னர், தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு நாயகியாக, சினேகா நடிக்கவுள்ளார். 13 வருடங்களுக்குப் பின்னர் தனுசுடன் இணைந்து சினேகா நடிக்கின்றார். ‘மாரி 2’ திரைப்படத்திற்குப் பின்னர் தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.
கொடி படத்தில் தனுசை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்த இயக்குனர் துரை செந்தில்குமார், அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்கவுள்ளார். இத் திரைப்படத்தில். இதில் ஒரு தனுசிற்கு ஒரு நாயகியாக சினேகா நடிக்கவுள்ளார்.
தனுஷ் மற்றும் சினேகா இறுதியாக,‘புதுப்பேட்டை’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 13 வருடங்களுக்குப் பின்னர் இப் புதிய திரைப்படத்தின் மூலம் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
Add Comment