இலங்கை பிரதான செய்திகள்

யாழ் சுது­ம­லையில் முதியவர் மீது தாக்குதல்….

யாழ். ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கழுத்­தி­லும் தாடைப் பகு­தி­யி­லும் தாக்­கப்­பட்டு, காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்­ப­வம் தொடர்­பில் மேலும் தெரி­வித்­த­தா­வது

யாழ்ப்­பா­ணம் – ஆனைக்­கோட்­டை­யைச் சேர்ந்த 62 வய­து­டைய குறித்த நபர் மானிப்­பாய் அந்­தோ­னி­யார் கோவி­லில் வழி­பாடு செய்­வ­தற்­காக நேற்­றுக் காலை மோட்டார் சைக்கிளில் சென்­ற­ போது, சுது­ம­லைச் சந்­தி­யில் வைத்து அவர்­மீது தாக்­கு­தல் நடத்­தப்பட்டுள்ளது. இதை­ய­டுத்து தாக்­கு­த­லுக்கு இலக்கானவர் யாழ்ப்­பா­ணம் போதன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் காவற்துறையினர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்­தே­க­ ந­பரை கைது செய்­துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.