இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் போயிருந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கை சேர்ந்த 80 வயதான சோமஸ்கந்தன் விசாலாட்சி எனும் வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டு உள்ளார்.

குறித்த பெண் மணி கடந்த 20ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில் உறவினர்களால் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுஉள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap