இலங்கை பிரதான செய்திகள்

ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்


உயிரிழந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.  கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு இன்று 2.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜனின் தலைமையில் நடைபெற்றுள்ளது

இந்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், சு.பசபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன், ‘ஜெனிவா மாயைகளும், உண்மைகளும்’ எனும் தலைப்பில் திரு நிலாந்தன் அரசியல் ஆய்வுரையும் நிகழ்த்தினார்.

யுத்தகாலத்தில் ஊடக துறையில் பணியாற்றிய பு.சத்தியமூர்த்தி அவர்களின் நினைவாக ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது

அதில் காலத்திற்கு காலம் தொடர்ந்து இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளால் பல்வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்த சூழ்நிலைகளின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதிகளில் ஊடகவியலாளர்;களாகிய நாங்கள் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்; இன்னல்களை எதிர்கொண்டு எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பது யாவரும் அறிந்தது.

மாவட்டத்தில் அர்ப்பணிப்புக்களுடன் பணியாற்றியவேளை போரின் போது கொல்லப்;பட்ட மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்;கள் ஊடகப்பணியாளர்களை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சி நகரத்தில் கொல்லப்பட்ட மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவிடம் ஒன்றினை அமைப்பதற்;கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த நிலையில் இந்த நினைவுத்தூபியினை அமைப்பதற்கான பொருத்தமான இடம்ஒன்றினை வழங்க உதவுவதற்கு கரைச்சிப்பிரதேச சபையிடம் நாங்கள் வினையமாக வேண்டி நிற்கின்றோம். எமது கோரிக்கைக்கு அமைவாக பொருத்தமான இடம்ஒன்றினை தெரிவு செய்து எமக்கு வழங்கி உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்து.

நிகழ்வில் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் ; நினைவாக அவரது நண்பர்களின் அனுபவ பகிர்வடங்கிய நூலும் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய அனந்தி சசிதரன், யுத்த காலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் பணி தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள், யுத்த காலத்தில் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு தொடர்பிலும், இறுதி காலத்தில் மக்கள் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்ட பல நினைவுகளை நினைவுகூர்ந்தார்.

நிகழ்வில் அரசியல் ஆய்வுரை நிகழ்த்திய அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் குறிப்பிடுகையில், இறுதி யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள், காணாமல் ஆக்கப்பட்டசம்பவங்கள் உள்ளிட்டவை தொடர்பில் குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் கிளிநொச்சியிலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஜெனிவா சென்று அங்கு இருவேறு முகங்களை காட்டுவதாகவும், அதே சமயம் அடைக்கலநாதன் தலைமையில் ஐந்து கட்சிகள் இணைந்து ஒப்பமிட்டு ஜெனிவாவிற்கு சென்றமை தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களில் பலர் இளம் பெண்களாக இருந்ததாகவு்ம், அவர்களின் காலம் 10 ஆண்டுகளின் பின்னர் வயதடைந்தவர்களாகவும், அவர்கள் தமது இளமை பருவத்தை தொலைத்து மறுமணம் நோக்கி செல்ல முடியாத நிலையில் தமது வாழ்வை தொலைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இன்று நாம் ஜெனிவா அமர்வுடன் கதை முடிந்தது. இனி அடுத்த ஜெனிவா அமர்வுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களை போராட்டங்களிற்கு இழுத்துவிடுவோம். அப்புாது பல தாய்மார் இறந்திருப்பார்கள். இப்போதே 24 பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link