பிரதான செய்திகள் விளையாட்டு

மியாமி டென்னிஸ் – ரோஜர் பெடரர் 4-வது முறையாக சம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் வென்று முன்னாள் முதல்தர வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4-வது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் .

இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரர் கடந்த வருடம் சம்பியன் பட்டத்தினை பெற்ற அமெரிக்காவின் ஜோன் இஸ்னருடன் போட்டியிட்ட நிலையில் 6-1, 6-4 என்ற நேர்செட்டில் வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் .

37 வயதான பெடரர் கைப்பற்றிய 54-வது பெரிய பட்டம் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ரோஜர் பெடரர் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதேவேளை தோல்வி அடைந்த ஜோன் இஸ்னர் 9-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.