Home இலங்கை வடக்கில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் போரினால் பாதிப்பு….

வடக்கில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் போரினால் பாதிப்பு….

by admin
வடக்கு மாகா­ணத்­தில் 3 இலட்­சத்­துக்­கும் அதி­க­மான பெண்­கள் போரி­னால் பாதிக்­கப்­பட்டு, அதற்­கான நீதி வேண்­டி­யும், குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­துக்­கான வழி­வ­கை­களை வேண்­டி­யும் நித்­தம் போரா­டிக்­கொண்­டுள்­ள­னர் என்று வடக்­கு­மா­கா­ணப் பெண்­கள் சமா­சம் அறிக்­கை­யிட்­டுள்­ளது.
பாதிக்­கப்­பட்­டுள்ள பெண்­கள் தொடர்­பில் அர­சி­டம் பேசித் தீர்­வு­க­ளைப் பெற்­றுத்­த­ரு­மாறு கோரி, வடக்கு மாகா­ணத்­தைப் பிர­தி­நி­தித்­து­வப் படுத்­தும் அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­க­ளி­டம் நேற்று அந்த அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டது.
நிலை­மா­று­கால நீதிக்­காய் எங்­க­ளின் குரல் என்ற தலைப்­பில் நேற்று யாழ்ப்­பா­ணத்தில் உள்ள விருந்­தி­னர் விடு­தி­யில் இடம்­பெற்ற நிகழ்­வின்­போதே அந்த அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டது.
அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
இலங்­கை­யில் போரி­னால்ப் பாதிக்­கப்­பட்ட தமிழ் பேசும் மக்­கள் வட கிழக்கு உட்­பட வட­மேல் மாகா­ணத்­தில் அதி­க­மாக வாழ்ந்து வரு­கின்­ற­னர்
சுமார் 89 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பெண்­கள் போரி­னால் வித­வை ­க­ளாக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­ப­தற்கு அப்­பால் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­கள், காணா­மற்­போன அங்­கத்­த­வர்­க­ளின் குடும்­பங்­கள் தடுப்­புக்­கா­வ­லி­லுள்ள அங்­கத்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளின், உற­வி­னர்­க­ளும், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளாக்­கப்­பட்டு குடும்­பத்­தைத் தலைமை தாங்­க­மு­டி­யாத நிலை­யி­லுள்ள ஆண்­க­ளின் குடும்­பங்­கள், தாய் தந்­தையை இழந்த குடும்­பத்­தைத் தலைமை தாங்­கும் பெண்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளாய் குடும்­ப த்­தைத் தலைமை தாங்­கும் பெண்­கள் என்ற வகைப்­பாட்­டுக்­குள் உள்ள பெண்­க­ளென கிட்­டத்­தட்ட மூன்று இலட்­சத்­துக்­கும் மேற்­பட்ட பெண்­க­ளும் ஏனைய போரி­னால் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளு­மா­கிய நாம் எமக்­கான நீதி வேண்­டி­யும் எங்­க­ளின் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­துக்­கான வழி­வ­கை­களை வேண்­டி­யும் போரி­னால் பாதிக்­க­ப்பட்ட பெண்­க­ளாய் உங்­க­ளி­டம் எங்­க­ளது வேண்­டு­கோள்­க­ளை­யும் சிபா­ரி­சு­க­ளை­யும் மன்­னார், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, யாழ்ப்­பா­ணம் மற்­றும் புத்­த­ளம் மாவட்­டங்­கள் சார்­பாக முன்­வை க்­கின்­றோம்.
போரி­னால் பாதிக்­க­பட்ட பெண்­க­ளாக நாம் முப்­பது வரு­டங்­க­ளாக துயரை அனு­ப­வித்து வரு­கின்­றோம். கண­வரை இழந்து, குடும்­பத்­தின் அங்­கத்­த­வர்­களை இழந்து, ஆண்­து­ணை­யின்றி ஆத­ர­வற்று வாழும் நலி­வுற்ற மக்­க­ளா­கிய நாங்­கள், எங்­க­ளது பாது­காப்­பை­யும், எங்­க­ளது பிள்­ளை­க­ளின் பாது­காப்­பை­யும் முதன்­மை­யா­கக் கோரி நிற்­கின்­றோம். எங்­க­ளால் எங்­க­ளது பிள்­ளை­க­ளைத் தனித்து விட்டு தூர இடங்­க­ளுக்கு வாழ்­வா­தார முயற்­சி­க­ளில் ஈடு­ப­டச் செல்­வது அச்­ச­மா­க­வுள்­ளது.
இரா­ணு­வ­ம­ய­மாக்­கல் ஒரு­பக்­கம் இரா­ணு­வ­ம­ய­மாக்­கல் மறு­பு­றம் அதி­க­ரித்து வரும் இளை­ஞர்­க­ளின் போதை­வஸ்­துப்­பா­வனை. நாம் உழைப்­ப­தற்கு ஒரு­போ­தும் அஞ்­சு­ப­வர்­க­ளல்ல. ஆனா­லும் பல வரு­டங்­க­ளா­கத் தொட­ரும் எங்­க­ளது மனக்­க­வ­லை­க­ளும் ஆரோக்­கி­ய­மற்ற நிலை­யும் எங்­களை நோயா­ளி­க­ளாக்­கி­விட்­டன.
எங்­க­ளது உற­வு­கள் உயி­ரோடு இருக்­கின்­றார்­களா இல்­லையா என்ற ஏக்­க­மும், விரக்­தி­யும் எம்­மீதே எமக்கு அக்­க­றை­யில்­லாத நிலையை ஏற்­ப­டுத்தி விட்­டன.
இருந்­தும் நாம் எம் பிள்­ளை­க­ ளுக்­காக வாழ வேண்­டி­யுள்­ளது. தொடர்ச்­சி­யான இரா­ணுவ அச்­சு­றுத்­தல்­க­ளும் இன்­றும் நாமும் காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ரும் இணைந்து நடத்­தும் கூட்­டங்­க­ளுக்­கும், ஆர்ப்பாட்­டங்­க­ளுக்­கும் சென்று வந்­த­தா­லும் எம்­மைப் பற்­றிய தக­வல்­கள் இரா­ணுவ புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் சேக­ரிக்­கப்­ப­டு­கின் றன.
எங்­க­ளது உற­வு­கள் எங்கு உள்­ளார்­கள் என்­றும் எமக்கு தெரி­ய­வில்லை.எங்­க­ளது வாழ்­வா­தா­ரத்­துக்­கான காணி­க­ளை­யும் சட்ட முறைப்­படி பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.
எங்­களது முறைப்­பா­டு­க­ளுக்கு சரி­யான பதி­லும் நீதி­யும் எமக்கு கிடைக்­கப்­பெ­ற வில்லை.வாழ்­வ­தற்கு வீடும் இல்லை வாழ்­வா­தா­ரத்­தினை மேற்­கொள்­ள­வும் முடி­ய­வில்லை.
நிலை­மா­று­கால நீதி­யின் கீழ் பால் நி­லைக் கண்­ணோட்­டத்­து­டன் எங்­களை அணு­குங்­கள். நிலைத்­தி­ரு க்­கக்­கூ­டிய வாழ்­வா­தார முயற்­சி­க­ளி னை வழங்க எற்­பா­டு­க­ளினை முன்­மொ­ழி ­யுங்­கள். நாங்­க­ளும் மனி­தர்­கள்­தான். எங்­க­ளது குடும்­பம் பட்­டி­னி­யா­கக் கிடக்­கும்­போது எங்­க­ளது மனங்­கள் பத­று­கின்­றன.
எவ்­வ­ளவு வரு­டங்­கள்­தான் நாம் பொறுப்­பது? எனவே இந்த இடத்­தில் உங்­க­ளி­டம் கேட்­கின்­றோம் அனைத்­துப் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளின் குரல்­க­ளாய் எமக்­கான நீதி­யி­னைத் தாம­த­மின்­றிப் பெற்­றுத் தாருங்­கள். நாமும் இந்­நாட்­டுப் பிர­ஜை­களே என்­றுள்­ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More