பிரதான செய்திகள் விளையாட்டு

பெங்களூருக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் 7 விக்கெட்டுக்களால் வெற்றி


ஐபி.எல். கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றிபெற்றது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரு அணிகளுக்குமிடையில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 159 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணிக்கு இது முதல் வெற்றியெனும் நிலையில் பெங்களூரு அணிக்கு இது 4-வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.