இலங்கை பிரதான செய்திகள்

பெற்றோருக்குப் பயந்து தன்னைக் கடத்தியதாக நாடகமாடிய சிறுவன்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத சிறுவன், பெற்றோருக்குப் பயந்து தன்னைக் கடத்தியதாகக் கூறி காவல்நிலையம் வரை சென்ற சம்பவம் ஒன்று வடமராட்சியில் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி மாலு சந்திப் பகுதியில் நண்பர்களுடன் நீண்ட நேரம் பொழுதைக் கழித்த சிறுவன், வீடு திரும்பத் தாமதம் ஆகியதால், தன்னை சிலர் வானில் கடத்திச் சென்றனர் என்றனர் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்

பதற்றமடைந்த பெற்றோர் நெல்லியடி காவல்நிலையத்துக்கு சிறுவனை அழைத்துச் சென்று முறைப்பாடு செய்துள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுவன் பொய் கூறியதை அறிந்து கொண்டதனையடுத்து சிறுவனை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.