இலங்கை பிரதான செய்திகள்

அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவு தினம்   பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது

இதன் போது யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பபில்ராஜ் நினைவேந்தல் உரையினையாற்றினார், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் மலர் மாலை அணிவித்த நிலையில்p மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் வு.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற அதனைத்தொடர்ந்து மாணவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றினர்.

அதேவேளை கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்திலும் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வட மாகாணசபை முன்னள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தவிசாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.