நாட்டின் இன்று பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஆறு பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 10 மணிமுதல் பண்டாரநாயக்க விமான நிலையத்தினுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக விமான பயணிகள் தவிர ஏனையோர் விமான நிலைய வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டர்கள் எனவும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விமானப் பயணங்களை மேற்கொள்கின்ற பயணிகள் உரிய காலத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறும் விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Spread the love
Add Comment