இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை முழுவதுமான சுற்றிவளைப்புகளில் 16 பேர் கைது ஆயுதங்கள் மீட்பு…

#policearrestlk #Srilanka #EasterSundayAttackLK

இலங்கை முழுவதும் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  திறப்பனயில் நால்வரும் வவுணதீவில் இருவரும், பண்டாரகம, பாலாங்கொட, மாத்தறை, வத்தளை, தெல்தெனிய ஆகிய இடங்களில் தலா ஒவ்வொருவரும் மெகல்லாவயில் இருவரும் இறக்குவானை 3 பேருமென 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பண்டாரகமயில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத அமைப்பொன்றுடன் தொடர்புடையவரென சந்தேகப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  அதேவேளை திறப்பனைப் பகுதியில் கைதுசெய்யப்பட்டவரிடம் ரிப்பிட்டர் மற்றும் 12 போர் துப்பாக்கிகளும் வத்தளையில் கைதுசெய்யப்பட்டவரிடம் 2 வோக்கிடோக்கிகளையும் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.