உலகம் பிரதான செய்திகள்

கலிபோர்னியா யூத வழிபாட்டு தளத்தில்துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – மூவர் காயம்


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யூத வழிபாட்டு தளத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த தாக்குதலை மேற்கொண்ட ஈடுப்பட்ட 19 வயதான நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர்  தகவல் எதனையும் வெளியிடாதநிலையில் நிலையில், அமெரிக்க ஜனாதிபபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை வெறுப்பு குற்றமென தெரிவித்துள்ளார்.
கடந்த ; ஆறு மாதங்களுக்கு முன்பு பீட்பெக்கில் உள்ள யூத வழிப்பாட்டு தளத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்திருந்தனர். அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் யூதர்களுக்கு எதிராக நடந்த மோசமான தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது

 #California   #shooting

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap