இலங்கை பிரதான செய்திகள்

யாழில் பாவனைக்குதவாத பொருட்கள் மீட்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் இருந்து பாவனைக்குதவாத பெருந்தொகையான தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர்களில் பொதிகள் மற்றும் பணம் என்பன விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கபட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமான கட்நத 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து நாட்டில் பல பாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ். நாவாந்துறை மற்றும் ஐந்து சந்திப் பகுதியில் பெருமளவிலான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை காவல்துiறியனர், இராணுவம் மற்றும் விசேட அதிரப்படையினர் இணைந்து மேற்க்கொண்டனர் இதன்போதே மேற்படி பள்ளிவாசலில் குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

குறித்த பொருட்கள் மீட்கபட்டதை தொடர்ந்து சுகாதாரப்பிரிவினர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அழைக்கபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதாரப்பிரிவினர் பொருட்களை ஆய்வு செய்ததுடன் பாவனைக்குதவாத தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர் பொறிக்கப்பட்ட பொதிகளையும் பொறுப்பெடுத்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

#jaffna #manipay #mosque, expiry

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.