பிரதான செய்திகள் விளையாட்டு

டெல்லியை சென்னை 80 ஓட்டங்களால் வென்றுள்ளது

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், 50-வது லீக் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ஓட்டங்களால் வென்றுள்ளது . சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இடம்பெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நிலையில் சென்னை 80 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது #ipl #chennaisuperkings

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.