பிரதான செய்திகள் விளையாட்டு

சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வென்று மும்பை அடுத்தசுற்றுக்கு முன்னேற்றம்

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தசுற்றுக்கு முன்னேறியுள்ளது.  மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனைடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து 163 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 162 ஓட்டங்களை எடுத்தது.

இதனால் போட்டி சமன் நிலையில் முடிந்தமையினால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் களம் இறங்கிய ஐதராபாத் அணி 8 ஓட்டங்களை எடுத்தனையடுத்து விளையாடிய மும்பை அணி 9 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்று  அடுத்தசுற்றுக்கு முன்னேறியுள்ளது.

#ipl #mumbaiindians #SunrisersHyderabad

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.