பிரதான செய்திகள் விளையாட்டு

20 ஓவர் போட்டி தரவரிசையில் பாகிஸ்தான் தொடர்ந்தும் முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி அணிகளின் வருடாந்த தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் பாகிஸ்தான் 286 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடரும் அதேவேளை 262 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா 2-வது இடத்திலும், 261 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3-வது இடத்திலும் 261 புள்ளிகளுடன் அவுதிஸ்திரேலியா 4-வது இடத்திலும் 260 புள்ளிகளுடன் இந்தியா 5-வது இடத்திலும் உள்ளன.

இதேவேளை . உறுப்பு நாடுகளான 20 ஓவர் போட்டியில் விளையாடும் சிறு நாடுகளுக்கு சர்வதேச அந்தஸ்து வழங்குவது என ஐ.சி.சி. கடந்த ஆண்டு முடிவு செய்திருந்த நிலையில் தரவரிசை பட்டியலில் 80 நாடுகளை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#icc #pakistan #t20

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.