இலங்கை பிரதான செய்திகள்

அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அண்மையில் பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் அதற்கு நாம் ஆதரவாக வாக்களிக்கவுமில்லை அதேநேரம் எதிர்க்கவுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றில் வாக்களித்ததாக கூறப்பட்டமை உண்மைக்கு புறம்பானது. அவ்வாறு யாரும் வாக்களிக்கவில்லை. அன்று எமது பிரதிநிதிகளும் இருந்தனர். அன்று இடம்பெற்ற குறித்த அவசரகால நிலை தொடர்பில் எம்மவர்கள் எதிர்க்காதது உண்மைதான் அதை ஏற்றுக்கொள்கின்றோம். அதற்காக நாம் அதனை ஆதரித்தோம் என கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

இன்று 20 வாகனங்களில் வடக்கு நோக்கி வெடிபொருட்களுடன் வாகனங்கள் வந்துள்ளதாக புலனாய்வு தரப்பு கூறுகின்றது. அந்த விடயம் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனால், அவ்வாறான ஓர் வெடி சம்பவம் இங்கு இடம்பெற்றால் யார் பொறுப்பு கூறுவது எனவும் அவர் தெரிவித்தார்

கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கான கட்டடத்திற்கு அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வ இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி தனியார் பேருந்த உரிமையாளர் சங்கத்தின் 25 லட்சம் ரூபா நிதியில் புதிதாக கட்டடம் ஒன் நிரந்தரமாக அமைத்துக்கொள்வதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். கிளிநாச்சி தனியார் பேருந்து உதிமையாளர் சங்கத்தின் தலைவர் நாகராசா நகுலராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் , கரைச்சி பிரதேச சபை தவிசாயளர் அ.வேழமாலிகிதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் சில விடயங்களை வினவினர்.
இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பிலும் அவரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர்,

யாழ் பல்கலைக்கழகத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படம் பழயது என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த பல்கலைக்கழகத்தினை சோதனையிடுமாறு பல்கலைக்கழக சமூகமே கோரி வந்துள்ளது. அவர்கள் கைதுக்கு முன்னரும் இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் தாக்குதல்தாரி கிழக்குமாகாண ஆளுநருடன் புகைப்படம் எதற்காக எடுத்துகொண்டார் என்பது தெரியாது. அவருடன் மாத்திரமல்ல பல அரசியல்வாதிகளுடனும் எடுத்துக்கொண்டனர். அதனை வைத்துக்கொண்டு நாம் சாதாரணமாக அவர்களை சந்தேகிக்க முடியாது. ஆனால் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக அமைந்திருக்க வேண்டும். அனைவருக்கும் ஒரேமாதிரியாக அது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

#sritharan #jaffnauniversity #governor #emergencylaw

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.