இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

அட்டனில் இராணுவ சீருடைகள் மீட்பு


அட்டன் நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அட்டன் டிக்கோயா நகர சபையினால் குவிக்கப்பட்டுள்ள குப்பை கூழத்தில் இருந்து இன்று(; 07.05.2019 ) காலை 9 மணியளவில் இராணுவ சீருடைகள கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அட்டன் டிக்கோயா நகர சபை கழிவு அகற்றும் பகுதி ஊழியர்களினாலஇதுகுறித்து அட்டன் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, இவை மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இராணுவ சீருடைகளான தொப்பி மற்றும் காற்சட்டை என்பனவற்றை அட்டன் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஆடையகங்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒப்பான துணிகள், உடைகள் இருப்பின் அவற்றை அகற்றிவிடும் படியும் ஒப்படைக்கும்படியும் பாதுகாப்பு தரப்பினரால் வலியுறுத்தப்பட்ட நிலையில் இன்று இவ்வாறு குப்பை கூழத்திலிருந்து இராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளது.

இதனால் அப்குப்பை கூழ பகுதியை மேலதிக சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளனர்.
(க.கிஷாந்தன்)

#hatton #armyuniform #army

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.