உலகம் பிரதான செய்திகள்

ஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் – பலர் காயம்


ஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். குற்ற விசாரணைக்கு உள்படுத்தப்படுவோரை சீனாவுக்கு அனுப்பிவைத்து விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் முயற்சிகளின் போதே இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை, இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த சட்டத்திருத்தம் ஹொங்கொங் சுதந்திரமாக இயங்குவதற்கு அச்சுறுத்தலாக அமையும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஹொங்கொங் ஜனநாயகத்துக்கு ஆதரவான அவைத்தலைவர் மாற்றப்பட்டு, சீனாவுக்கு ஆதரவான ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Politicians #fight #HongKong #parliament

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.