இந்தியா பிரதான செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் 2 தீவிரவாதிகனைச் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது தீவிரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதற்குப் பதிலாக படையில் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#jammukashmeer #killed

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.